Latestமலேசியா

அமெரிக்க மந்தநிலை அபாயத்தால் உந்தப்பட்டு 18 மாதங்களில் இல்லாத உச்சத்தைத் தொட்ட ரிங்கிட்

கோலாலம்பூர், ஆகஸ்ட்-20, நேற்று ரிங்கிட்டின் மதிப்பு 18 மாதங்களில் இல்லாத உச்சத்தை தொட்டது.

அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை ஏற்படலாமென்ற கவலையால் அந்நிலை உந்தப்பட்டிருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

நேற்று 6 மணிக்கு பரிவர்த்தனை முடிவில், அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு 4.3805-தாக பதிவாகியது.

கடந்தாண்டு பிப்ரவரிக்குப் பிறகு ரிங்கிட்டின் மதிப்பு இத்தனை வலுவாகப் பதிவானது இதுவே முதன் முறை.

ரிங்கிட்டின் அடுத்த இலக்கு 4.3000-ராக பதிவாவதே என ஆய்வார்கள் கணித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று ரிங்கிட்டின் மதிப்பு 4.4295-தாக மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இவ்வேளையில், ஆசியான் நாடுகளின் முக்கிய நாணயங்களை விடவும் ரிங்கிட் நேற்று வலுவாக பரிவர்த்தனையாகியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!