Latestஉலகம்

அமெரிக்க வரலாற்றில் கருப்பின பெண் உருவம் பொறித்த நாணயம் வெளியீடு

வாஷிங்டன், ஜன 12- அமெரிக்க வரலாற்றிலேயே முதன்முறையாக கருப்பித்தனவரின் உருவம் பொறித்த நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.

அந்நாட்டைச் சேர்ந்த பிரல பெண் எழுத்தாளரும் சமூக ஆர்வலருமான மாயா ஏஞ்சலோவின் உருவம்தான் அது. இவர் முன்னதாக தன் சுயசரிதையை “கூண்டில் அடைக்கப்பட்ட பறவை ஏன் பாடுகிறது என்பது எனக்குத் தெரியும்” எனும் தலைப்பில் வெளியிட்டிருந்தார்.

அப்புத்தக்கத்தில் தனக்கு இழைக்கப்பட்ட இனவெறி, பாலியல் வன்கொடுமை தாக்குதல் முதலியவற்றை குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்காவில் கருப்பினத்தவர்களின் உரிமைக்காக குரல் கொடுத்தவர்களில் ஒருவருமான ஏஞ்சலோ கடந்த 2014ஆம் ஆண்டு இறந்தார். இந்நிலையில், சமூகத்திற்கு அவர் ஆற்றிய பங்குகளை நினைவுகூறும் வகையில், அவரின் உருவம் பொறித்த கால் டாலர் நாணயத்தை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!