
கோலாலம்பூர், டிச 3 – பிரதமர் அன்வார் இப்ராஹிமின் அமைச்சரவையில் இந்திய சமூகத்தின் பிரதிநிதித்துவம் மிகவும் குறைவாக இருப்பது குறித்து இரண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது அதிர்ச்சியை வெளிப்படுத்தினர்.
Batu Gajah நாடாளுமன்ற உறுப்பினரான DAP யைச் சேர்ந்த V. Sivakumar மட்டுமே மனித வள அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக பத்து காவான் நாடாளுமன்ற தொதியின் முன்னாள் உறுப்பினரான கஸ்தூரி பட்டு தெரிவித்துள்ளார். ஒருவருக்கு மேற்பட்ட இந்தியர்கள் அமைச்சர்களாக நியமிக்கபடுவார்கள் என நான் எதிர்பார்த்தேன். ஆனால் சிவக்குமார் மட்டுமே அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளது அதிர்சியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.
கிள்ளான் நாடாளுமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினரான Charles Santiago வும் இதே கருத்தை பதிவு செய்துள்ளார். தீபகற்ப மலேசியா, சபா, சராவ உட்பட அனைத்து பிரதிநித்துவத்தை அமைச்சரவை கொண்டுள்ளது. ஆனால் இந்திய சமூகத்தை சேர்ந்த மேலும் ஒருவர் அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சராக இந்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கலாம் என Charles Santiago தெரிவித்தார். தமது ஒற்றுமை அரசாங்கத்தின் 28 உறுப்பினர்கள் கொண்ட அமைச்சரவையை அன்வார் நேற்றிரவு அறிவித்தார்.