பேங்காக் , ஆக 14 – தாய்லாந்தின் அரசியலமைப்பு நீதிமன்றம் பிரதமர் ஸ்ரேத்தா தவிசியை ( Srettha Thavisin ) நீக்கியது. தனது அமைச்சரவையில் சிறைத்தண்டனை அனுபவித்த ஒரு முன்னாள் வழக்கறிஞரை நியாமித்ததை தொடர்ந்து Srettha Thavisin -னுக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அரசியலமைப்பு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினால் தாய்லாந்தில் அரசியல் நெருக்கடி ஏற்படும் என்பதோடு ஆளும் கூட்டணியின் மறுசீரமைப்பு பற்றிய அச்சமும் ஏற்பட்டுள்ளது.
சொத்துடமை அதிபரான ஸ்ரேத்தா 16 ஆண்டுகளில் நான்காவது தாய்லாந்து பிரதமர் ஆனார். 16 ஆண்டுகளில், நெறிமுறை தரத்தை பூர்த்தி செய்யாத ஒரு அமைச்சரை நியமித்ததன் மூலம் அரசியலமைப்பை மீறியதாக தீர்ப்பளித்த பின்னர், அதே நீதிமன்ற தீர்ப்பின் மூலம் நீக்கப்பட்ட நான்காவது தாய்லாந்து பிரதமராக Srettha Thavsin விளங்குகிறார்.