
கோலாலம்பூர், ஜனவரி-18 – அமைச்சர் ஒருவரின் மகன் அண்டை நாட்டில் இரகசியமாக திருமணம் செய்து கொண்ட விவகாரத்தில், அவரின் திருமணச் சான்றிதழ் சட்டப்பூர்வமானதே என விசாரணை அதிகாரி உறுதிப்படுத்தப்படுத்தியுள்ளதாக தேசியப் போலீஸ் படைத் தலைவர் தான் ஸ்ரீ ரசாருடின் ஹுசாய்ன் தெரிவித்திருக்கிறார்.
இதற்கு முன்பு ரசாருடின்தான் உறுதிபடுத்தியதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், இதுதான் அவரின் உண்மையான கூற்று என்பதை தெளிவுபடுத்தும் விதமாக இந்த காணொளி அமைந்துள்ளது.
கடந்த செப்டம்பரில் யாருக்கும் தெரியாமல் அண்டை நாட்டில் அவர்கள் திருமணம் செய்துகொண்டனர்.
காதலுக்கு எதிர்ப்பு வந்ததால் இருவரும் அவ்வாறு செய்துள்ளனர்; நண்பர்களுக்கும் அது தெரியாது என ரசாருடின் கூறினார்.
குடும்பத்தின் பெயரைக் காக்க அவர்கள் திருமணத்தை மறைத்திருக்கலாமென்றார் அவர்.
இந்நிலையில் அவ்விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கை பினாங்கில் துணைத் தலைமை வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என IGP சொன்னார்.
வயிற்றில் வளரும் குழந்தைக்குப் பொறுப்பேற்குமாறு கூறிய ப் பெண்ணை அந்த அமைச்சரின் மகன் மிரட்டியதாக டெலிகிராமில் முன்னதாக தகவல் வைரலானது.
டிசம்பர் 24-ஆம் தேதி பினாங்கு, பட்டவொர்த்தில் ஒரு வீட்டில் மேலும் சிலர் உடனிருக்க, அப்பெண்ணுடன் பேச்சுவார்த்தை நடத்திய போது அவ்வாடவர் மிரட்டல் விடுத்ததாகக் சொல்லப்பட்டது.
சம்பந்தப்பட்ட அமைச்சரான உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில், எல்லாரையும் போல தனது மகனும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் இல்லையென்றும், புகார் செய்யப்பட்டிருந்தால் நிச்சயம் விசாரணை நேர்த்தியாக நடைபெறுமென்றும் கூறியிருந்தார்.