Latestமலேசியா

அமைதிக்கும் ஒற்றுமைக்கும் முன்னுரிமை வழங்குவீர் – சிலாங்கூர் சுல்தான் தம்பதியர் அறைகூவல்

ஷா அலாம் , ஜன 1 – அமைதி மற்றும் ஒற்றுமைக்கு முன்னுரிமை வழங்கும்படி மேன்மை தங்கிய சிலாங்கூர் Sultan Sharafuddin Idris Shah மற்றும் Selangor Tengku Permaisuri Norashikin மக்களை கேட்டுக்கொண்டனர். மேலும் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை பாதிக்கக்கூடிய உணர்ச்சிகரமான விவகாரங்களை எழுப்பக்கூடாது என்றும் Sultan Sharafuddin வலியுறுத்தினார். சவால்களை எதிர்நோக்குவதற்கு அரசியல் கருத்து வேறுபாடுகளையும் சிந்தாந்தங்களையும் ஒதுக்கிவைக்கும்படி அவர் வலியுறுத்தினார். அரசியல்வாதிகள் தங்களுக்கிடையே தகராறு செய்து கொண்டிருப்பதோ அல்லது மக்களுக்கான தங்களது பொறுப்புணர்வை புறக்கணித்துவிட்டு சொந்த நலன்களில் கவனம் செலுத்தக்கூடாது என சிலாங்கூர் ஆட்சியாளர் கேட்டுக்கொண்டார். புத்தாண்டை முன்னிட்டு சிலாங்கூர் அரச அலுவலகத்தின் முகநூலில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் சுல்தான் இதனை தெரிவித்திருக்கிறார். மலேசியர்களுக்கு குறிப்பாக சிலாங்கூர் மக்கள் நாட்டை மேம்படுத்துவதற்கு ஒன்றினைந்து பணியாற்ற வேண்டும் என Sultan Sharafuddin மற்றும் Tengku Permaisuri Morashikin அறைகூவல் விடுத்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!