Latestமலேசியா

2022 ஆண்டு அரசாங்க சேவையிலிருந்து 54 % மருத்துவ அதிகாரிகள் விலகல்

கோலாலம்பூர், பிப் 28 – அரசாங்க சேவையில் வேலை செய்துவந்த பாதிக்கும் மேற்பட்டோர் அல்லது 100,696 மருத்துவ அதிகாரிகளில் 54 விழுக்காட்டினர் அல்லது பாதிக்கும் மேற்பட்டோர் கடந்த 2022ஆம் ஆண்டு விலகியுள்ளனர். தனியார் துறையில் வேலை செய்வதற்காக அவர்கள் அரசாங்க சேவையிலிருந்து விலகியதாக சுகாதார அமைச்சர் சுல்கிஃப்லி அஹ்மத் தெரிவித்திருக்கிறார்.

அரசாங்க சேவையிலிருந்து விலகிய மருத்துவர்களில் 45 விழுக்காட்டினர் தற்போது வெளிநாடுகளில் வேலை செய்து வருகின்றனர். தனிப்பட்ட காரணங்களுக்காக 28 விழுக்காட்டினர் விலகிய வேளையில் 6 விழுக்காட்டினர் பொது பல்கலைக்கழகங்களில் வேலை கிடைத்ததால் அரசாங்க சேவையிலிருந்து விலகினர். மேற்கல்வியை தொடர்வதற்காக 2.7 விழுக்காட்டினரும், சொந்த கிளினிக் திறப்பதற்காக 0.8 விழுக்காட்டினரும் அரசுச் சேவையிலிருந்து விலகியதாக நாடாளுமன்றத்தில் சுல்கிஃப்லி அஹ்மத் தெரிவித்தார்.

அரசு சேவையில் மருத்துவ அதிகாரிகள் தொடர்ந்து சேவையாற்றுதை உறுதிப்படுத்த UD 41 பிரிவுக்கான ஒப்பந்தகால மருத்துவ அதிகாரிகளுக்குத் தொடக்க சம்பளமாக RM 5,197 ரிங்கிட் வழங்கப்படுவதாகவும் இதர பொதுச் சேவைத்துறைகளைவிட இது அதிகமாகும் என அவர் கூறினார். 2019 ஆம் ஆண்டு மற்றும் 2023ஆம் ஆண்டில் 9,822 மருத்துவ அதிகாரிகள் நிரந்தர பதவிகளில் அமர்த்தப்பட்டனர், 2024 /2025 ஆண்டுகளுக்கு மேலும் 6,000 பேர் நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!