கோலாலம்பூர், பிப் 24 – தாம் பிரதமராக இருந்தபோது அம்னோவின் தலைவர் பதவியை தம்மிடம் ஒப்படைப்பதற்கு Zahid Hamidi முன்வந்ததாக பெரிக்காத்தான் நேசனல் தலைவரான டான்ஸ்ரீ Muhyiddin Yassin நேற்றிரவு அம்பலப்படுத்தினார்.
Sri Perdanaவில் தம்மை சந்தித்தபோது அம்னோவிற்கு திரும்பும்படி Zahid Himidi வலியுறுத்தினார். அம்னோவுக்கு வந்துவிடுங்கள் , அம்னோவின் தலைவர் பதவியை ஒப்படைக்க தயாராய் இருக்கிறேன் என்றும் Zahid Hamidi தம்மிடம் தெரிவித்ததார்.
ஆனால் அந்த வாய்ப்பை தாம் உடனடியாக நிராகரித்துவிட்டதாக Muhyiddin கூறினார். கட்சியின் ஒத்துழைப்போடு தாம் இந்த அழைப்பை விடுப்பதாகவும் Zahid கூறியதாக Bukit Kepong சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றியபோது Muhyiddin Yassin தெரிவித்தார். இது குறித்து Zahid Hamidi யிடம் கேட்டால் நான் பொய் சொல்வதாக கூறுவார் என்றும் Muhyiddin குறிப்பிட்டார்.