
கோலாலம்பூர், நவ 27 – நடந்து முடிந்த 15ஆவது பொதுத் தேர்தலில் அம்னோவின் மோசமான தோல்விக்காக அம்னோ மற்றும் தேசிய முன்னணயில் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி உட்பட எவரும் பதவி விலக வேண்டியதில்லை. மாறாக கட்சியின் தலைமைத்துவம், டிவிசன் மற்றும் கிளை உட்பட அனைத்து தரப்பினரும் தங்களுக்கிடையிலான நட்புறவையும் சகோதரத்துவத்தையும் வலுப்படுத்திக் கொள்வதற்காக ஒன்றுபட வேண்டும் என அம்னோவின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ அகமட் மஸ்லான் அறைகூவல் விடுத்தார். பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தால் அதிகமானோர் அவசியம் பதவி விலக வேண்டும்.
இவர்களில் மாவட்ட வாக்குச் சாவடிகளின் தலைவர்களும் அடங்குவர் என அவர் கூறினார், இதுதவிர அனைத்து மாநிலங்களின் அம்னோ தொடர்பு குழுக்களின் தலைவர்கள், மாநில தேசிய முன்னணியின் தலைவர்கள், இளைஞர் மற்றும் மகளிர் பிரிவின் தலைவர்களும் அம்னோவிற்கு வாக்குகளை திரட்ட தவறியதற்காக பதவி விலக வேண்டும் என அகமட் மஸ்லான் வலியுறுத்தினார்.