
கோலாலம்பூர், டிச 26 – எதிர்வரும் அம்னோ பொதுப் பேரவையில் கட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கு போட்டி இருக்குமா அல்லது இல்லையா என்பது குறித்து இன்னும் அம்னோ உச்ச மன்றம் முடிவு செய்யவில்லையென அக்கட்சியின் தலைமைச் செயலாளரான அகமட் மஸ்லான் தெரிவித்திருக்கிறார்.
ஜனவரி மாதம் அம்னோ உச்ச மன்றக் கூட்டம் வழக்கமான மாதந்திர கூட்டத்தை நடத்தவிருக்கிறது. இது தவிர சிறப்பு உச்சமன்ற கூட்டமும் நடைபெறும்.
அம்னோ உச்ச மன்ற கூட்டத்தில் இது குறித்து முடிவு செய்யப்படலாம் என பொந்தியானில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிபோது அகமட் மஸ்லான் இவ்வாறு கூறினார். எதிர்வரும் அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் கட்சித் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிருக்கக்கூடாது என்பது குறித்து விவாதிகப்படலாம் என்று இம்மாத தொடக்கத்தில் வெளியான தகவலையும் அம்னோ மறுத்திருந்தது.