
கோலாலம்பூர், ஜன 27 – 15 ஆவது பொதுத் தேர்தலில் தனது வேட்பாளர்களையும் கட்சியையும் கீழறுப்பு செய்தவர்கள் பெரிய அளவில் களையெடுக்கப்படுவர் என அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்திருக்கிறார். இந்த விவகாரம் குறித்து இன்று நடைபெறும் அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என அவர் கூறினார். கட்சிக்கு எதிரான கீழறுப்பு நடவடிக்கையில் செயல்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அண்மையில் நடைபெற்ற அம்னோ பொதுப் பேரவையிலும் தாம் குறிப்பிட்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.