
கோலாலம்பூர், ஜன 25 – அம்னோவில் கைரியின் உறுப்பினர் நிலை குறித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை தெரியவரும். வெள்ளிக்கிழமை மாலையில் நடைபெறும் அம்னோ உச்சமன்ற கூட்டத்திற்குப் பின் இது குறித்த முடிவு அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. அன்றைய தினம் நடைபெறும் அம்னே உச்சமன்ற கூட்டத்தில் கைரி விவகாரம் உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும்.