Latestமலேசியா

மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம், துணையமைச்சர் அப்துல் ரஹ்மான் HRD Corp வருகை

கோலாலாம்பூர், டிச 18 – மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம், துணையமைச்சர் அப்துல் ரஹ்மான் முகமட் ஆகிய இருவரும் முதல் முறையாக HRD Corp எனப்படும் மனித வளங்கள் மேம்பாட்டு கழகத்தின் அலுவலகத்திற்கு இன்று வருகை புரிந்தனர்.

இம்மாதம் 12 ஆம் தேதி ஸ்டீவன் சிம் மனித வள அமைச்சராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து மனித வள அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களுக்கு வருகை புரிந்து அந்த நிறுவனங்களின் செயல்பாட்டை மேலும் அறிந்துகொள்ளும் வகையில் HRD Corp-ப்பிற்கான அவரது வருகை அமைந்தது.

HRD Corp நிறுவனம் இவ்வாண்டில் அடைந்த வெற்றிகள், அதன் செயல்பாடு ஆகியவவை குறித்தும் அவ்விருவருக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது. 5 லட்சம் தொழிலாளர்களுடன் 90,000 தொழில் நிறுவனங்கள் HRD Corp நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பது , 21 லட்சம் பேருக்கு பயிற்சி வழங்கியது போன்ற அம்சங்கள் குறித்தும் அமைச்சருக்கும் துணையமைச்சருக்கும் விளக்கமளிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!