
கோலாலம்பூர், ஜன 13 – அம்னோவை அழிப்பதற்கு பாஸ் விரும்புவதாக அம்னோவின் துணைத் தலைவரான டத்தோஸ்ரீ முகமட் ஹசான் வெளியிட்டிருக்கும் அறிக்கை அபத்தமானது என டத்தோஸ்ரீ Takiyuddin Hassan தெரிவித்திருக்கிறார். நாட்டின் அரசியல் வரலாற்றை எடுத்துக்கொண்டால் நீண்ட காலமாகவே பாஸ் கட்சியை அழிப்பதற்கு அம்னோ உறுதியாக இருந்தது. கடந்த காலத்தில் பாஸ் கட்சியை தடை விதிப்பதற்கும் கூட அம்னோ திட்டமிட்டிருந்ததாக பாஸ் கட்சியின் தலைமை செயலாளருமான Takiyuddin Hassan இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.