Latestஇந்தியா

விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை

சென்னை, நவ 28 – மூத்த நடிகரும், தே.மு.தி.க கட்சியின் தலைவருமான விஜயகாந்த் உடல் நிலை சீராக இல்லையென அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மியாட் மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்பினால் இம்மாதம் 18ஆம் தேதி விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார். முதலில் அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாகவும், ஆனால் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீராக இல்லையென மியாட் மருத்துவமனை வெளியிட்ட அறிகையில் தெரிவித்துள்ளது. விஜயகாந்த்திற்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவருக்கு இன்னும் 14 நாட்களுக்கு தொடர் சிகிச்சை தேவைப்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!