கோத்தா கினாபாலு, ஏப்ரல்-5, அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ டாக்டர் அக்மால் சாலே சபா கோத்தா கினாபாலுவில் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
நாளை டாங் வாங்கி போலீஸ் தலைமையகத்தில் வாக்குமூலம் அளிக்கவிருந்த நிலையில் தாம் கோத்தா கினாபாலு போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டதாக facebook-கில் அவர் கூறினார்.
எது எப்படி இருந்தாலும், தனது நிலைபாட்டில் இருந்து ஒரு inch கூட நகரப் போவதில்லை; என்றாலும் போலீசுக்கு தாம் முழு ஒத்துழைப்பை வழங்கப் போவதாக அக்மால் உறுதியளித்தார்.
இவ்வேளையில் தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உதவும் பொருட்டே அக்மால் கைதானதாக, தேசியப் போலீஸ் படைத் தலைவர் Tan Sri Razaruddin Hussain உறுதிப்படுத்தினார்.
KK Mart கடையில் Allah வாசகம் பொறிக்கப்பட்ட காலுறைகள் விற்கப்பட்ட சர்ச்சை தொடர்பில் பேசிய பேச்சுக்கும், நடவடிக்கைக்கும் எதிராக அக்மாலுக்கு எதிராக 2 போலீஸ் புகார்கள் செய்யப்பட்டிருப்பதாக Razaruddin சொன்னார்.
விசாரணைகள் முழுமைப் பெற்றதும் மேல் நடவடிக்கைக்காக அதனறிக்கை சட்டத் துறை அலுவலகத்திடம் சமர்ப்பிக்கப்படும் என்றார் அவர்.
KK Mart கடைகளைப் புறக்கணிக்குமாறு அக்மால் தொடர்ந்து குரல் கொடுத்து வருவது, ஏற்கனவே மோசமாகியுள்ள பிரச்னையை மேலும் பெரிதாக்கி, இன-மத நல்லிணக்கத்தைப் பாதிக்கச் செய்யும் என அவர் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.