
கோலாலம்பூர், மார்ச் 12 – அம்னோ இளைஞர் பிரிவின் புதிய தலைவராக மலாக்கா Merlimau சட்டமன்ற உறுப்பினரும் ஆட்சிக்குழு உறுப்பினருமான Akmal Saleh தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அதிகாரப்பூர்வமற்ற முடிவுகளின்படி Akmal வெற்றி பெற்றதாக அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற Asyraf Wajdi Dusuki தெரிவித்தார்.
மொத்தம் உள்ள 191 அம்னோ டிவிசன்களில் இதுவரை 102 டிவிசன்களின் வாக்குகளை Akmal பெற்றதாக Asyraf கூறினார். அம்னோ இளைஞர் பிரிவின் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட Paya Besar நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நிதித்துறை துணையமைச்சரான Shahar Abdullah, senator Arman Azha Abu Hanifah மற்றும் Meor Hassan Mat Ali ஆகியோர் தோல்வி கண்டனர்.