
கோலாலம்பூர், ஜூன் 24 – இந்தோனேசியாவுக்கான தூதராக பெயர் குறிப்பிடப்பட்டுளள Tajuddin Abdul Rahman அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் பதவிலியிருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி இம்முடிவை எடுத்ததாக அம்னோவின் தலைமைச் செயலாளர் அகமட் மஸ்லான் தெரிவித்தார். இந்தோனேசியாவுக்கான மலேசிய தூதராக நியமனக் கடிதத்தை பெற்றுக்கொள்வதற்கு இஸ்தானா நெகாராவுக்கு தாம் அழைக்கப்பட்டுள்ளதாக ஞாயிற்றுக்கிழமையன்று தாஜூடின் ரம்லி உறுதிப்படுத்தியிருந்தார்.