
கோலாலம்பூர், பிப் 4 – எதிர்வரும் கட்சித் தேர்தலில் தமது பதவியை தற்காத்துக்கொள்ளப் போவதில்லையென அம்னோ உதவித் தலைவரான டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்திருக்கிறார். இளம் தலைவர்களுக்கு வழிவிடும் வகையில் இந்த முடிவை தாம் பரிசீலித்து வருவதாக முன்னாள் பிரதமரும் Bera நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான இஸ்மாயில் சப்ரி கூறினார்.
உதவித் தலைவர் பதவியை தற்காத்துக் கொள்ளும் சிந்தனை எனக்கு இல்லை . அம்னோவை வலுப்படுத்தக்கூடிய புதுமுகங்கள் இருந்தால் அவர்களுக்கு தாம் வழிவிடத் தயாராய் இருப்பதாக இஸ்மாயில் சப்ரி தெரிவித்ததாக சினார் ஹரியான் நாளிதழும் செய்தி வெளியிட்டுள்ளது. அடுத்த மாதம் கட்சித் தேர்தலை அம்னோ நடத்தவிருக்கிறது.