Latestமலேசியா

அம்னோ உதவித் தலைவர் பதவிக்கு இஸ்மாயில் சப்ரி போட்டியிடவில்லை

கோலாலம்பூர், பிப் 26 – விரைவில் நடைபெறவிருக்கும் அம்னோ தேர்தலில் தாம் வகித்துவரும் உதவித் தலைவர் பதவியை தற்காத்துக்கொள்வதற்கு போட்டியிடப் போவதில்லையென முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அறிவித்திருக்கிறார். 2018 ஆம் ஆண்டு முதல் அம்னோ உதவித் தலைவராக இருந்துவரும் இஸ்மாயில் சப்ரி இன்று இணையத் தள பதிவேட்டிடம் இதனை உறுதிப்படுத்தினார். தமது இந்த முடிவுக்கு எந்தவொரு காரணத்தையும் அவர் தெரிவிக்கவில்லை. எனினும் இது குறித்து விரைவில் பத்திரிகை அறிக்கை ஒன்றை வெளியிடப்போவதாக Bera நாடாளுமன்ற உறுப்பினருமான இஸ்மாயில் சப்ரி கூறினார். மூன்று உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கு நடப்பு உதவித் தலைவர்களான காலிட் நோர்டின் மற்றும் மாட்ஷீர் காலிட் உட்பட இதுவரை ஒன்பது பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!