Latestமலேசியா

அம்னோ உயர்மட்ட பதவிகளுக்கு போட்டியில்லையா? எதிர்க்கும் கட்சி பேராளர்கள்

கோலாலம்பூர், ஜன 14 – கட்சித் தேர்தலில் உயர்மட்ட பதவிகளுக்கு போட்டியிருக்கக் கூடாது என முன் வைக்கப்பட்ட தீர்மானத்தை அம்னோ பேராளர்கள் சிலர் நிராகரித்திருக்கின்றனர்.

தாம் எந்தவொரு போட்டியையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக, கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடியே கூறியிருக்கும்போது, அத்தகையதொரு தீர்மானம் எதற்கு என அம்னோ பொதுப்பேரவை விவாதத்தின் போது , இன்று பேராளர்கள் கேள்வி எழுப்பினர்.

அத்துடன் , கட்சி உயர்மட்ட பொறுப்புகளுக்கான தேர்வில் , கட்சியின் கீழ்மட்ட உறுப்பினர்களின் தலையீடு இருப்பது அவசியமென சிலர் குறிப்பிட்டனர்.

நேற்று, நெகிரி செம்பிலான் பேராளர் Mohd Shukri Samsudin, கட்சியின் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு போட்டியிருக்கக் கூடாது எனும் தீர்மானத்தை முன் வைத்தார் .

விவாதத்தின் இறுதியில், இன்று அம்னோ பேராளர்கள் அந்த தீர்மானம் தொடர்பில் வாக்களிக்கவிருக்கின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!