Latestமலேசியா

அம்னோ தலைவர்களின் அழுத்தத்தினால் பொதுத் தேர்தலை பிரதமர் இப்போது நடத்தக்கூடாது – டாக்டர் ராமசாமி வலியுறுத்து

கோலாலம்பூர், ஜூன் 4 – நீதிமன்ற வழக்குகளை எதிர்நோக்கியிருக்கும்
அம்னோவைச் சேர்ந்த சில தலைவர்களின் நெருக்குதலுக்கு அல்லது அழுத்தத்தினால் பிரதமர் Ismail Sabri Yaakob இப்போதைக்கு 15ஆவது பொதுத் தேர்தலை நடத்தக்கூடாது என பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் டாக்டர் ராமசாமி கேட்டுக்கொண்டார். பணவீக்கம், நாட்டின் பொருளாதாரம் மற்றும உணவு பாதுகாப்பு போன்ற நலனை கருத்திற்கொண்டு இப்போதைக்கு தேர்தல் நடத்தும் கோரிக்கையை பிரதமர் சில காமாகவே எதிர்த்து வந்துள்ளார். நடப்பு அரசாங்கத்தின் பதவிக் காலம் அடுத்த ஆண்டுவரை இருப்பதால் அதுவரை அவர் பதவியில் இருக்க முடியும். எனவே இப்போதைக்கு அவர் தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் இல்லையென்று ராமசாமி வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக்கொண்டார்.

அம்னோவின் சுயநலம் கொண்ட சில தலைவர்களின் நெருக்குதலை ஏற்று இப்போது பிரதமர் நடத்தினால் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியிலுள்ள பினாங்கு, சிலங்கூர் மற்றும் பாஸ் கட்சி தலைமையிலான கிளந்தான் ஆகிய மாநில அரசாங்கங்கள் இப்போதைக்கு தேர்தல் நடத்தாமல் இருக்கக்கூடும். அந்த மாநிலங்களின் அரசாங்கத்தின் ஆட்சிக் காலம் அடுத்த ஆண்டுவரை இருப்பதால் அவை இப்போதைக்கு தேர்தல் நடத்துவதை தவிர்க்கலாம். அப்படியொரு சூழ்நிலை ஏற்பட்டால் இரண்டு முறை தேர்தல் நடத்துவதற்கு வழிவகை ஏற்பட்டுவிடும் என்பதோடு இதனால் தேவையற்ற செலவு ஏற்படும். எனவே இப்போதைக்கு பொதுத் தேர்தல் நடத்துவதை பிரதமர் இஸ்மாயில் சப்ரி தவிர்த்தால் பெரும் அளவிலான மலேசியர்களின் நல்லலெண்ணத்தையும் ஆதரவையும் பெற முடியும் என டாக்டர் ராமசாமி சுட்டிக்காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!