கோலாலம்பூர், பிப் 25 – 7 நாட்கள் தம்மை தனிமைப்படுத்திக் கொண்ட பின்னர் , கடந்த வாரம் தமக்கு கோவிட் தொற்று கண்டிருந்த தகவலை, அம்னோ துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ மொஹம்மட் ஹாசான் வெளியிட்டிருக்கின்றார்.
SOP -களை தாம் கவனமுடன் கடைப்பிடித்து வந்தாலும், அத்தொற்றிலிருந்து தம்மால் விடுபட முடியாமல் போனதாக அவர் கூறியுள்ளார்.
நாட்டில் கடந்த சில தினங்களாக அரசியல்வாதிகள் சிலர் தங்களுக்கு கோவிட் தொற்று கண்ட விபரத்தை வெளியிட்டு வருகின்றனர். அவ்வகையில், தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹிஷாமுடின் துன் ஹூசேன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வேளையில், நேற்று இளைஞர் விளையாட்டு துணையமைச்சர் வான் அஹ்மாட் ஃபைசால் ( Wan Ahmad Fayhsal) , நெகிரி செம்பிலான் மெந்திரி பெசார் அமினுடின் ஹாருன் ( Aminuddin Harun ) தங்களுக்கு கோவிட் தொற்று கண்டிருப்பதாக தெரிவித்திருந்தனர்.