Latestமலேசியா

அம்னோ தேர்தலில் எதிர்த்து போட்டியிடுவது யாராக இருந்தாலும் எதிர்கொள்ள தயார் ; கூறுகிறார் சாயிட்

எதிர்வரும் அம்னோ தேர்தலில், கட்சியின் தலைமைத்துவ பொறுப்புக்கு தம்மை எதிர்த்து போட்டியிடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை எதிர்கொள்ள தயார் என டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மட் சாயிட் ஹமிடி தெரிவித்தார். இதற்கு முன்னர், இருவர் தம்மை எதிர்த்து போட்டியிட்ட போதிலும், அவர்களால் ஆதரவை திரட்ட முடியாமல் போனதையும் சாயிட் சுட்டிக் காட்டினார். ஆவணத்தோடு அல்லது தற்பெருமையோடு தாம் அதனை கூறவில்லை. மாறாக, 2018-ஆம் ஆண்டு அது நிரூபிக்கப்பட்டதாக சாயிட் சொன்னார். அம்னோ தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்படுமா? இல்லையா? என்பது நாடு முழுவதும் உள்ள கட்சியின் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேராளர்களின் முழு அதிகாரத்துக்கும், உரிமைக்குரலுக்கு உடபட்டது என்றாரவர். இவ்வாண்டு நடைபெறவுள்ள அம்னோ தேர்தலில், கட்சியின் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு போட்டி நிலவுமா? என வினவப்பட்ட போது, சாயிட் அவ்வாறு கருத்துரைத்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!