
கோலாலம்பூர், ஜன 9- இம்மாதம் 11 – ஆம் தேதி தொடங்கி 14 – ஆம் தேதிவரை நடைபெறும் அம்னோ பொது பேரவையில் அம்னோ மற்றும் அதன் தோழமை கட்சிகளைத் தவிர ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெற்றுள்ள கட்சிகள் மற்றும் இதர கட்சிகளின் தலைவர்கள் எவருக்கும் அழைப்பு விடுக்கப்படாது என அக்கட்சியின் தலைமைச் செயலாளர் Ahmad Maslan தெரிவித்திருக்கிறார். வெளிநாடுகளின் தூதர்களுக்குக்கூட இம்முறை அழைப்பு விடுப்பதில்லை என அண்மையில் அம்னோ உச்ச மன்றத்தில் முடிவு செய்யப்பட்டதாக அவர் கூறினார். அம்னோ பொதுப் பேரவையில் கலந்து கொள்ளும்படி ஒற்றுமை அரசாங்கத்தின் உறுப்பினராக இருக்கும் கட்சிகளின் தலைமைச் செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என இதற்கு முன் அம்னோ தலைவர் அகமட் ஸாஹிட் ஹமிடி கூறியிருந்ததாக தகவல்கள் வெளியாகின. அம்னோ பொதுப் பேரவையில் கலந்துகொள்வதற்கான அழைப்பு எதனையும் தாம் இன்னும் பெறவில்லையென பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று கூறியிருந்தார்.