
கோலாலம்பூர், ஜன 21 – கட்சித் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடக்கூடாது என அதன் பொதுப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக சங்கங்களின் பதிவகத்தில் புகார் செய்த அம்னோவின் இரண்டு உறுப்பினர்களின் நடவடிக்கை துணிச்சலானது என்பதோடு அதனை தாம் வரவேற்பதாக கைரி ஜமாலுடின் தெரிவித்திருக்கிறார். அம்னோவில் இன்னமும் துணிச்சலான மற்றும் நியாயமான உறுப்பினர்கள் இருப்பதை அவர்களின் நடவடிக்கை காட்டுவதாக அம்னோ இளைஞர் பிரிவின் முன்னாள் தலைவருமான கைரி ஜமாலுடின் கூறினார். பொதுப்பேரவையின் தீர்மானத்தை சங்கங்களின் பதிவகம் சீராய்வு செய்யும் என்று தமது Instagram – மில் கைரி பதிவிட்டுள்ளார்.