
கோலாலம்பூர். ஜூன் 23 – அம்னோ வரலாற்றில் டத்தோஸ்ரீ Ismail Sabri Yaakob
பலவீனமான பிரதமர் என சில தரப்பினர் கூறி வருவதை கைரி ஜமாலுடின் மறுத்தார். ஜோகூர் அம்னோ தொடர்புக் குழுவின் துணைத்தலைவரான Nur Jazlan பிரதமரை மோசமாக குறைகூறுவதை தவிர்க்க வேண்டும் என கைரி ஜமாலுடின் கேட்டுக் கொண்டார்.
அம்னோவில் அணி அரசியல் ஏற்படுவதை தடுப்பதற்கு பிரதமரை வெளிப்படையாக குறைகூறக்கூறுவதை அனைத்து தரப்பினரும் நிறுத்திக்கொள்வது நல்லது என அவர் வலியுறுத்தினார். அமைச்சரவையில் சுரைடா கமாருடின் விவகாரம் குறித்து முடிவு எடுப்பதில்
Ismail Sabri யின் பலவீனம் தெரிவதாக Nor Jazlan வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார். இதுபோன்ற அறிக்கைகள் அம்னோவை வலுப்படுத்தும் முயற்சிக்கு உதவியாக இருக்காது என அம்னோ இளைஞர் பிரிவின் முன்னாள் தலைவருமான கைரி ஜமாலுடின் சுட்டிக்காட்டினார்.