அம்பாங், ஆகஸ்ட் 27 – அடிக்கடி ஒழுக்கச் சிக்கல்களுக்குக் கண்டிப்பதும், நிறுவனத்தின் நிர்வாகத்திடம் புகாரளிப்பதுமாகச் செயல்பட்டு வந்த கண்காணிப்பாளர் ஒருவரை, சக ஊழியர் சரமாரியாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜாலான் அம்பாங் உத்தாமாவில் (Jalan Ampang Utama) உள்ள தொழிலாளர்கள் தங்கும் விடுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து 24, 21 மற்றும் 16 வயதிலான மூன்று ஆடவர்கள் கைதாகியதாக அம்பாங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவரும் உதவி ஆணையருமான முகமட் அசாம் இஸ்மாயில் (Mohd Azam Ismail) தெரிவித்தார்.
அந்த காண்காணிப்பாளர் மீது ஏற்பட்ட அதிருப்தியில் தாக்கிய 21 வயது இளைஞரின் திட்டத்திற்கு மற்ற இருவரும் உதவியுள்ளனர்.
சிறுநீர் பரிசோதனையின் முடிவில் மூவருமே போதைப்பொருள் உட்கொள்பவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.