
அம்பாங், ஜன 16 – அம்பாங்கில் ஞாயிற்றுக்கிழமையன்று ஒரு அடுக்ககத்தில்
தனது மனைவியை தாக்கியது மற்றும் கத்தியினால் மிரட்டிய விவகாரம் தொடர்பில் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். சிலாங்கூர் அம்பாங் வட்டாரத்தில் குடும்ப வன்முறை தொடர்பாக நடைபெற்ற இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் இரு ஆடவர்கள் கைது செய்யப்பட்டதை அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் முகமட் அசாம் இஸ்மாயில் (Mohd Azam Isamil ) உறுதிப்படுத்தினார்.
தனக்கு வேறு ஒரு ஆடவருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகத்திற்கு உள்ளானதை தொடர்ந்து ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் தனது கணவர் தாக்கியதோடு கண்மூடித் தனமாக உதைத்ததாக பாலர் பள்ளி ஆசிரியையிடமிருந்து புகார் பெற்றதைத் தொடர்ந்து அவரது 45 வயது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் கழுத்தில் காயம் அடைந்துள்ளார். எனினும் கைது செய்யப்பட்ட அப்பெண்ணின் கணவர் போதைப் பொருள் எதனையும் பயன்படுத்தவில்லை என தெரியவந்துள்ளதோடு விசாரணைக்காக மூன்று நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக முகமட் அசாம் தெரிவித்தார்.