கோலாலம்பூர், மார்ச் 7 – அம்பாங் பார்க் எல்.ஆர். டி நிலையத்தின் மின் படிக்கட்டில் இன்று விடியற்காலையில் தீப்பற்றியது. விடியற்காலை மணி 5.16 அளவில் அங்கு தீப்பற்றியதாக மாநகர் தீ மற்றும் மீட்புத்துறை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பபட்டது. மின் படிக்கட்டில் பிடித்த தீ கூரைப்பகுதிவரை பரவியது.எனினும் இந்த விபத்தில் எவரும் காயம் அடையவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டது.
அந்த LRT நிலையத்திலிருந்து புகை பரவத் தொடங்கியதும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக Dang wangi OCPD துணை கமிஷனர் Noor Dallhan Yahaya தெரிவித்தார். பொதுமக்களின் பாதுகாப்புக்காக அந்த மின்படிக்கட்டு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மின்கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து தீ பரவியிருக்கலாம் என நம்பப்படுவதாக Noor Dellhan கூறினார்.