
அமெரிக்காவில் அதிநவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் விவேக கழிவறை தொட்டி பாத்தாயிரம் அமெரிக்க டாலர் அல்லது 43 ஆயிரத்து 749 ரிங்கிட்டிற்கு விற்கப்பட்டிருக்கிறது.
நுமி 2.0 என பெயரிடப்பட்டிருக்கும் அந்த கழிவறை கிண்ணத்தை, Wisconsin-னிலுள்ள, Kohler எனும் நிறுவனம் தயாரித்துள்ளது.
அப்படி இந்த கழிப்பறை தொட்டியில் என்ன இருக்கிறது என்று கேட்டால், இதில் ஒளியூட்டி, தொடு திரை, சரிசெய்துக் கொள்ளும் வசதியுடன் தானியங்கி இருக்கையும் இந்த விவேக கழிவறையும் கொண்டுள்ளதாம்.
அது மட்டுமா, செய்திகளை கேட்கும் வசதியையும் இந்த கழிப்பறை தொட்டி உள்ளடக்கி உள்ளது.
இருந்தாலும், இரு கழிவறை தொட்டிக்கு இந்த விலையு வசதியும் கொஞ்சம் அதிகம்தான் என வலைத்தளவாசிகள் கருத்து பதிவிட்டுள்ளனர்.