கோத்தா பாரு, மே-6 – அரசாங்க நிறுவனமொன்றின் தலைமை நிர்வாகி உள்ளிட்ட 3 மூத்த அதிகாரிகள், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் MACC-யால் கிளந்தானில் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
45 முதல் 49 வயது வரையிலான அம்மூவரும் பல்வேறு அரசாங்கக் குத்தகைகள் தொடர்பில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களிடம் லஞ்சத்தைக் கேட்டு பெற்று வந்த சந்தேகத்தின் பேரில் கைதாகினர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு கிளந்தான் MACC தலைமையகத்தில் வாக்குமூலம் அளிக்கச் சென்ற போது அவர்கள் கைதுச் செய்யப்பட்டனர்.
அவர்கள் லஞ்சமாக வாங்கிய மொத்த தொகை எவ்வளவு என்பது இன்னமும் MACC விசாரணையில் உள்ளது.
விசாரணைக்குத் தடுத்து வைக்கப்பட ஏதுவாக இன்று கோத்தா பாரு மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அம்மூவரும் நிறுத்தப்பட்டு அதற்கான ஆணைப் பெறப்படவிருக்கிறது.
2009-ஆம் ஆண்டு MACC சட்டத்தின் கீழ் அவர்கள் விசாரிக்கப்படுகின்றனர்.