Latestமலேசியா

அரசாங்கத்திடம் கேட்டால் தான் கிடைக்குமா ? இந்தியர்களின் நிலை குறித்து காமாட்சி வேதனை

அரசாங்கத்தில் இந்தியர்கள் சார்ந்த விவகாரமாகவோ தேவையாகவோ இருக்கும்போது, ஒவ்வொரு முறையும் குரல் எழுப்பியே கேட்டால் தான் கிடைக்கும் என்ற நிலையில் இன்று வரை இந்திய சமூகம் இருப்பதாக தமது வேதனையை வெளிப்படுத்தி இருக்கின்றார் DAP கட்சியைச் சேர்ந்த, முன்னாள் சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜு.

கல்வியமைச்சின் , கல்வி ஆலோசனை மன்றத்தில் இந்தியர் ஒருவர் கூட இடம்பெறாத விஷயத்திலும் இந்திய சமூகத்துக்கும் இதே நிலை ஏற்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

அந்த வேதனையைத் தாம் இன்று கல்வியமைச்சர் Fadhlina Sidek -கை நேரில் சந்தித்து தெரியப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார் .

இதனிடையே, இன்று கல்வியமைச்சருடனான சந்திப்பின் போது, இந்திய சமூகத்தின் கல்வி மேம்பாட்டுக்கு தேவையான செயல்திட்டங்களை உட்படுத்திய , 2014 –இல் தயாரிக்கப்பட்ட Bluprint குறித்து விளக்கமளிக்கப்பட்டதாகவும் காமாட்சி கூறினார்.
அந்த செயல்திட்டத்தை, பேராசிரியர் N. S Rajendran முன் வைத்து, இந்திய சமூகத்துக்கான தேவைகள், பிரச்சனைகள் என்னவென்பதை கல்வியமைச்சரிடம் எடுத்து கூறியதாக அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!