Latestமலேசியா

அரசாங்கத்தின் தலைமை செயலாளராக சமசுல் அஸ்ரி நியமனம்

கோலாலம்பூர், ஆக 7 – அரசாங்கத்தின் புதிய தலைமைச் செயலாளராக சம்சுல் அஸ்ரி அபு பாக்கார் ( Shamsul Azri Abu Bakar) நியமிக்கப்படவிருக்கிறார் . ஆகஸ்ட் 12 ஆம் தேதியிலிருந்து அவர் இப்பதவிக்கு நியமிக்கப்படுவார் என பிரதமர் அலுவலகம் இன்று அறிவித்தது. தற்போது பிரதமர்துறையின் பொது – தனியார் பங்காளித்துவ பிரிவின் நடப்பு தலைமை இயக்குனராக இருந்துவரும் சம்சுல் இம்மாதம் 11ஆம் தேதியுடன் ஓய்வு பெறும் சுக்கி அலிக்கு (  Zuki Ali) பதிலாக அரசாங்க தலைமை செயலாளர் பதவியை ஏற்கவிருக்கிறார்.

2019 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதியிலிருந்து தலைமை செயலாளராக சுக்கி அலி இருந்து வந்தார். 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி ஓய்வு பெறுவதாக இருந்த சுகி அலி ( Zuki Ali ) இரண்டு ஆண்டு காலத்திற்கு அவரது ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!