கோலாலம்பூர், மார்ச் 3 – அரசாங்கத்தின் Jaminkerja Keluarga Malaysia முயற்சியினால் கடந்த ஆண்டு 500,000 பேர் வேலை வாய்ப்பை பெற்றனர் என பிரதமர் Ismail Sabri Yaakob தெரிவித்தார்.
பல்வேறு அமைச்சுகள், நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையின் ஒத்துழைப்பினால் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை பெற்றுதரும் அரசாங்கத்தின் முயற்சிகள் வெற்றி பெற்றதாக அவர் கூறினார்.
நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட இது 112 விழுக்காடு அதிகமாகும். இவ்வாண்டு மேலும் அதிகாமானோருக்கு வேலை வாய்ப்புக்களை உருவாக்க முடியும் என இன்று வெளியிட்ட அறிக்கையில் Ismail Sabri Yaakob தெரிவித்தார்.
இவ்வாண்டில் சுமார் ஆறு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் திட்டத்தை தேசிய வேலைவாய்ப்பு மன்றம் கொண்டிருப்பதாகவும் பிரதமர் கூறினார்.