
கோலாலம்பூர், ஜன 9 – அரசாங்கத்தில் தாம் மீண்டும் பணியாற்றும் சாத்தியம் இருப்பதை முன்னாள் கல்வி அமைச்சர் டாக்டர் Maszlee Malik கோடி காட்டியுள்ளார். அண்மையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை சந்தித்தபோது அரசாங்கத்தில் பணியாற்றுவதற்கு தயாராய் இருக்கும்படி தம்மை கேட்டுக்கொண்டதாக அவர் தெரிவித்தார். அதே வேளையில் அரசாங்கத்தில் தமது பங்கு என்ன என்பதை அன்வார் தெரிவிக்கவில்லை என்றும் அவர் விவரித்தார். PKR கட்சியின் மத்திய செயலவைக் கூட்டத்தில் அன்வாரை Maszlee சந்தித்ததாக நம்பப்படுகிறது. நாடு மற்றும் மக்களின் சுபிட்சத்திற்காக மேற்கொண்டுவரும் சீரமைப்புகளுக்காக அன்வாருக்கு பி.கே.ஆர் மத்திய செயற்குழு முழுமையான ஆதரவை வழங்கியிருப்பதாக தமது முகநூலில் Maszlee பதிவிட்டுள்ளார்.