
கோலாலம்பூர், மே 5 – அரசாங்கத்தை அமைப்பதற்கு எதிர்க்கட்சிகள் போதுமான நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்தால் நாடாளுமன்றக் கூட்டம் மீண்டும் கூடும்வரை எதிர்க்கட்சிகள் காத்திருக்க வேணடுமென பிரதமர டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். அரசாங்கம் அமைப்பதற்கு போதுமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் எழுத்துப்பூர்வமான சத்திய பிரமான பிரகடனத்தை எதிர்க்கட்சிகள் கொண்டிருந்தால் அதனை அவர்கள் நாளுமன்றத்தில் நிருபிக்கலாம் என அவர் கூறினார். எனினும் அடுத்த பொதுத் தேர்தல்வரை முழு தவணைக் காலத்திற்கும் ஒன்றுமை அராங்கம் தொடரந்து இருக்கும் என தாம் உறுதியாக நம்புவதாக பக்காத்தான் ஹாராப்பான் தலைவருமான அன்வார் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.