Latestமலேசியா

அரசாங்கத்தை கவிழ்க்க தலைநகரில் பேரளவில் ஆர்ப்பாட்டமா ?

கோலாலம்பூர், மார்ச் 19 – அரசாங்கத்தை கவிழ்க்க தலைநகரில் பேரளவில் ஆர்ப்பாட்டமா ? அந்த தகவல் உண்மையில்லை என போலீஸ் உறுதிப்படுத்தி இருக்கின்றது.

நாட்டில் பாதுகாப்பு கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், பொய்யான அந்த தகவலை மக்கள் பகிர வேண்டாமெனவும் Dang Wangi மாவட்ட போலீஸ் தலைவர் ACP Noor Dellhan Yahaya கேட்டுக் கொண்டார் .

அத்துடன், நாட்டில் பதற்றமான சூழலை ஏற்படுத்த கூடிய கூற்றுகளை வெளியிட வேண்டாமெனவும் , அனைத்து தரப்பினரையும் அவர் நினைவுறுத்தி இருக்கின்றார்.

நடப்பு அரசாங்கத்தை கவிழ்க்க , தலைநகரில் மலாய்க்காரர்கள் பங்கேற்கும் பேரளவிலான ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறவிருப்பதாக, நேற்று சமூக வலைத்தளங்களில் தகவல் ஒன்று அதிகம் பகிரப்பட்டிருந்தது .

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!