
புத்ராஜெயா, மார்ச் 28 – அரசாங்கத்தின் மீது மனநிறைவு இல்லையென்றால், தங்களது ஆதரவை மீட்டுக் கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உரிமையுள்ளது என கூறியிருக்கின்றார் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹம்மட் .
அவ்வாறு செய்வது சட்டத்துக்கு எதிரானதாக இல்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் நாட்டை முறையாக நிர்வகிக்கவில்லை என்றால் , ஆளும் அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள கட்சிகள், அந்த அரசாங்கத்தை கவிழ்த்து வேறொரு அரசாங்கத்தை தேர்வு செய்ய முடியும். இது தான் டான் ஶ்ரீ முஹிடின் யாசின் பிரதமராக இருந்தபோது நிகழ்ந்தது.
அப்போது அம்னோ மனநிறைவு கொள்ளாததால் முஹிடினுக்கான ஆதரவை மீட்டுக் கொண்டது. அதையடுத்து நாட்டின் தலைமைத்துவ பொறுப்புக்கு அம்னோவைச் சேர்ந்தவர் நியமிக்கப்பட்டதை மகாதீர் சுட்டிக் காட்டினார்.
நடப்பு அரசாங்கம் அதன் ஆட்சி தவணை முடியும் வரை அதிகாரத்தில் இருக்குமா என வினவப்பட்ட கேள்விக்கு மஹாதீர் அந்த பதிலை வழங்கினார்.