
கோலாலம்பூர், மார்ச் 13 – எதிர்க்கட்சியின் தவறுகளை கண்டுப்பிடிப்பதில் மட்டுமே குறியாக இருக்க வேண்டாம் என அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் ஹம்சா ஜைனுடின் நினைவறுத்தியுள்ளார். முன்னாள் உள்துறை அமைச்சர் என்ற முறையில் தாம் அராங்கத் தலைவர்களின் தவறுகளை கண்டறிய முடியும் என அவர் தெரிவித்தார். அரசாங்க தலைவர்கள் சம்பந்தப்பட்ட பல கோப்புக்கள் தம்மிடமும் இருப்பதாகவும் அவற்றை அவசியம் பயன்படுத்த வேண்டுமா என்பது குறித்து இன்னமும் ஆலோசித்து வருவதாக ஹம்சா தெரிவித்தார். இப்போதைய அரசாங்கம் பெரிக்காத்தான் நேசனலுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தால் அந்த கோப்புகளை அம்பலப்படுத்துவதற்கு தயங்கப் போவதில்லையென லாருட் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹம்சா கூறினார்.