
புத்ரா ஜெயா, செப் 15 – இவ்வாண்டு நாடு முழுவதிலும் உள்ள அரசாங்க உதவி பெற்ற பள்ளிகளுக்குப் பராமரிப்பு உதவிகளை கல்வி அமைச்சு வழங்கும் என தெரிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டின் அரசாங்க உதவிபெற்ற பள்ளிகளுக்கான நிர்வாக உதவிக்கான வழிகாட்டியின் அடிப்படையிலும், 2023ஆம் ஆண்டின் அரசாங்க உதவி பெற்ற பள்ளிகளுக்கான நிர்வாக விதிமுறை உதவி திட்டத்தின் கீழ் உதவி நிதிகள் வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2023 ஆம் அண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் தமிழ் மற்றும் சீன தொடக்கப் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளுக்கும் பராமரிப்பு உதவிகளுக்காக 900 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டதற்கு ஏற்ப இந்த உதவி அமைவதாக கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அரசாங்க பள்ளிகளில் கழிவறைகளை மேம்படுத்துவது மற்றும் பராமரிப்புக்கான சிறப்பு ஒதுக்கீடு குறித்து குறிப்பிட்ட சில தரப்பினர் கேள்வி எழுப்பியிருந்தது குறித்து தகவல் வெளியானதற்கு பதில் அளிக்கும் வகையில் கல்வி அமைச்சின் இந்த அறிக்கை அமைந்துள்ளது. சிறப்பு ஒதுக்கீடு அரசாங்கப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட போதிலும் அரசாங்க உதவிப் பெற்ற தமிழ் மற்றும் சீனப்பள்ளிகள் புறக்கணிக்ககப்படவில்லையென கல்வி அமைச்சு விளக்கம் அளித்துள்ளது.