Latest

அரசாங்கம் சட்டப்பூர்பூர்வமற்றதாக இருக்கிறது என்ற தோற்றம் மலாய்க்காரர்கள் மத்தியில் இருக்கிறது

கோலாலம்பூர், மார்ச் 9 – இப்போதைய ஒற்றுமை அரசாங்கம் சட்டப்பூர்வமற்றதாக இருக்கிறது என்ற தோற்றம் மலாய்க்காரர்கள் மத்தியில் இருப்பதாகவும் இதுவே அரசாங்கத்திற்கு மிகப்பெரிய பலவீனமாக இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த பலவீனத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உணர்ந்துள்ளதோடு மலாய்க்காரர்களின் ஆதரவை அதிகரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Ahmad Fauzi தெரிவித்திருக்கிறார். எனினும் அரசாங்கத்திற்கு இன்னும் போதுமான ஆதரவு கிடைக்கவில்லையென பொருளாதார விவகாரங்களுக்கான அமைப்பு ஏற்பாடு செய்த மலேசிய கண்ணோட்டம் மீதான மாநாட்டில் அவர் கூறினார்.

அன்வாருக்கு மலாய்க்காரர்களின் ஆதரவு குறைவாக இருப்பதால் Sheraton நடவடிக்கையைப் போன்று ஆட்சி கவிழ்பு முயற்சியை முன்னெடுக்கலாம் என பெரிக்காத்தான் நேசனல் தலைவர்கள் கருதுவதாக Fauzi தெரிவித்தார். தமக்கான ஆதரவை அதிகரிக்க வேண்டிய அவசியமும் தேவையும் அன்வாருக்கு இருப்பதாக தென்கிழக்காசிய மீதான Jeffrey cheah ஆய்வுக் கழகத்தின் அரசியல் ஆய்வாளரான Wong Chin Huat டும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!