
கோலாலம்பூர், ஜன 18 – பொங்கல் திருநாள் கொண்டாட்டத்தை , இந்தியர் பாரம்பரிய வாரமாக அறிவிக்கும்படி , அரசாங்கம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அதன் வாயிலாக நாட்டில் ஒற்றுமையை வளர்ப்பதோடு, தமிழர்களின் பாரம்பரியத்தை பாதுகாக்க முடியுமென கிள்ளான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ தெரிவித்தார்.
மேலும், அத்திருநாளை அங்கீகரித்து அதற்கான நடவடிக்கைகளை அதிகரிப்பதின் வாயிலாக, இந்நாட்டில் வாழும் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரத்திற்கு அரசாங்கம் மதிப்பளிக்கின்றது என்பதைக் காட்ட முடியுமென அவர் குறிப்பிட்டார் .
இதனிடையே, இந்தியர் பாரம்பரிய வாரத்தில், தமிழ் மக்கள் இசை , நடனம், பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றை நடத்தலாமென சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார்.
மேலும், தமது பரிந்துரைக்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்தால், பாரம்பரிய நிகழ்ச்சிகள், இந்தியர் கைவினைப் பொருள் கண்காட்சி போன்ற நிகழ்ச்சிகளை நடத்த முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.