Latestமலேசியா

அரசாங்க ஊழியர்களின் அதிகாரப்பூர்வ சடங்குகளுக்கான உடைகளின் விலை 100 % உயர்வு

கோலாலம்பூர், மார்ச் 29 – அரசாங்க சடங்குகளின் போது அணியும் பொதுச் சேவை ஊழியர்களின் ஆடைக்கான கட்டணம் 100 விழுக்காட்டுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

அந்த ஆடைகளின் கட்டணம் 1,500 ரிங்கிட்டிலிருந்து 3,500 ரிங்கிட்டுக்கு உயர்ந்திருப்பதாக பொதுச் சேவை துறை தெரிவித்தது.

இவ்வேளையில், அந்த ஆடைகளுக்கான கட்டணத்தை பொதுச் சேவை ஊழியர்கள் திரும்ப கோர முடியுமென , பொதுச் சேவை துறையின் தலைமை இயக்குநர் சுல்கப்ளி மொஹமட் ( Zulkapli Mohamed ) கடந்த வாரம் வெளியிட்ட சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் .

நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றத்தில் பணிபுரிபவர்கள் , மாநில ஆட்சியாளர்கள் அல்லது பேரரசரின் பதக்க விருதளிப்பு நிகழ்ச்சிக்கு செல்பவர்கள் , அதிகாரப்பூர்வ சடங்குகளுக்கான ஆடைகளை அணிய வேண்டியிருக்கும். அதற்கான குறிப்பிட்ட கட்டணத்தை பொதுச் சேவை ஊழியர்கள் அரசாங்கத்திடம் இருந்து திரும்ப கோர முடியுமென அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!