கோலாலம்பூர், பிப் 23 – அரசாங்க ஊழியர்களுக்கான நடப்பில் இருக்கும் 1,200 ரிங்கிட் குறைந்தபட்ச ஊதியத்தை , 1,800 ரிங்கிட்டாக உயர்த்தும்படி கியுபெக்ஸ் எனப்படும் அரசாங்க ஊழியர்களுக்கான சம்மேளனம் மீண்டும் அரசாங்கத்தை வலியுறுத்தி இருக்கிறது.
அந்த புதிய குறைந்தபட்ச ஊதியம் பரிசீலனையில் எடுத்துக் கொள்ளக் கூடிய நியாயமான தொகையிலே இருப்பதாக கியுபெக்ஸ் தலைவர் Datuk Adnan Mat தெரிவித்தார்.
அரசாங்க ஊழியர்களின் சம்பள விகிதம் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை பரிசீலிக்கப்பட வேண்டிய பட்சத்தில் , ஆகக் கடைசியாக அந்த சம்பளம் 2002 – இல் பரிசீலிக்கப்பட்டதாக அவர் கூறினார்.