
கோலாலம்பூர், நவ 8 – அரசாங்க ஊழியர்களுக்கான புதிய சம்பளத் திட்டம் அடுத்த ஆண்டு இறுதிக்குள் அறிவிக்கப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். புதிய சம்பளத் திட்ட அமலாக்கத்திற்கான வழிகாட்டி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிடப்படும் என அவர் கூறினார். புதிய சம்பளத் திட்டத்திற்கான வழிகாட்டியை நாங்கள் வெளியிடுவோம். இதன் வழி அடுத்த ஆண்டு இறுதியில் நாங்கள் புதிய சம்பளத் திட்டத்தை அறிவிப்போம் என அன்வார் கூறினார். ஒவ்வொரு 10 ஆண்டுக்கு ஒரு முறை சம்பள திட்டத்தை மறுஆய்வு செய்யும் கொள்கையை நாம் கொண்டிருந்தோம். இப்போது 12 ஆண்டுகளாகியும் அதே சம்பளத்திட்டத்தை கொண்டிருப்பதால் அடுத்த ஆண்டு இறுதியில் அனைத்து துறை ஊழியர்களுக்கும் உள்ளடக்கிய நிலையில் புதிய சம்பளத் திட்டம் இருக்கும் என அன்வார் கூறினார்.