Latestஉலகம்மலேசியா

அரசாங்க கொள்கைகள் தெளிவாக இருப்பது அவசியம் ; கூறுகிறார் பிரதமர்

பெர்லின், மார்ச் 14 – மலேசியா மீது அந்நிய முதலீட்டாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கை புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கு அரசியல் நிலைத்தன்மையே காரணம் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.

இதுவரை நான்காயிரத்து 400 கோடியை தாண்டி சாத்தியமான முதலீட்டு ஆர்வத்தை உருவாக்கியுள்ள ஜெர்மனியின் தொழில்துறை தலைவர்களுடன் மேற்கொள்ளப்பட்ட பரிமாற்றங்கள் பலனளித்துள்ளதாக பிரதமர் சொன்னார்.

“தொழில்துறை தலைவர்களின் ஆதரவு மிகவும் நன்றாக உள்ளது. இதுவரை, நான்காயிரத்து 400 கோடிக்கும் அதிகமான சாத்தியமுள்ள முதலீட்டு வாய்ப்புகளை பதிவுச் செய்துள்ளோம்” என பிரதமர் குறிப்பிட்டார்.

அதற்கு, மலேசியாவின் அரசியல் நிலைத் தன்மையே காரணம். அரசாங்க கொள்கைகள் தெளிவாக இருக்க வேண்டியது அவசியம். வரும் ஆண்டுகளில் அரசாங்கம் நிலையாக இருக்கும் என மக்கள் உறுதியாக நம்ப வேண்டுமென பிரதமர் கேட்டுக் கொண்டார்.

அரசியல் நிலைத்தன்மையை இழந்ததால், மலேசியா சிறிது காலம் “திக்கற்ற போக்கில்” இருந்தது. எனினும், மேம்பாட்டை நோக்கி சரியான பாதையில் பயணிக்க தொடங்கியவுடன் அது மீண்டும் பொருளாதார வளர்ச்சிக்கான சரியான பாதைக்கு திரும்பி விட்டதையும் அன்வார் சுட்டிக்காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!