Latestமலேசியா

அரசாங்க திட்டம் தொடர்பில் குற்றம் சாட்டப்படுகிறார் பெர்சாத்து தகவல் பிரிவு தலைவர்

கோலாலம்பூர், பிப் 21 – Jana Wibawa திட்டம் தொடர்பில் குற்றம் சாட்டப்படுவதற்காக , பெர்சாத்து கட்சியின் தகவல் பிரிவு தலைவர் Wan Saiful Wan Jan, இன்று நீதிமன்றம் அழைத்து வரப்பட்டார் .

நேற்றிரவு மணி 8-க்கு , MACC -மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்துக்கு வாக்குமூலம் அளிக்க சென்றிருந்தபோது, Tasek Gelugor நாடாளுமன்ற உறுப்பினருமான Wan Saiful கைது செய்யப்பட்டார்.

Jana Wibawa திட்டம், பூமிபுத்ரா குத்தகையாளர்களை உதவுவதற்காக மேற்கொள்ளப்பட்ட கோவிட் 19- ஊக்குவிப்புத் திட்டமாகும்.
அந்த திட்டத்தின் சில நடவடிக்கைகள் அதிகமான செலவை உட்படுத்தியிருந்ததாகவும், அத்திட்டம் திறந்த குத்தகை அடிப்படையில் வழங்கப்படவில்லை எனவும் பிரதமர் டத்தோ அன்வார் இப்ராஹிம் இதற்கு முன்பு குற்றம் சாட்டியிருந்தார்.

அத்திட்டம், முன்னாள் பிரதமர் டான் ஶ்ரீ முஹிடின் யாசின் கால கட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது. பெர்சாத்து கட்சியின் தலைவருமான முஹிடின் யாசின், சாட்சியாளராக கடந்த வெள்ளிக்கிழமை MACC- யால் தாம் விசாரிக்கப்பட்டதாக கூறியிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!