
கோலாலம்பூர், நவ 21 – அரசாங்க நிறுவனத்தின் தலைவர் ஒருவர் தமக்கு பாலியல் தொல்லையை கொடுத்துவருவதாக பெண் ஒருவர் செய்த புகார் தொடர்பில் புக்கிட அமான் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். 30 வயதுடய நிதி ஆலோசகரான அந்த பெண் கடந்த வாரம் இது குறித்து புகார் செய்துள்ளார். கடந்த ஆண்டு முதல் சம்பந்தப்பட் ஆடவர் வாட்ஸ்அப் புலனம் மூலமாக தமக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக அந்த பெண் புகாரில் தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட பெண்ணிடமிருந்து புகார் கிடைக்கப்பெற்றதை செபாங் போலீஸ் தலைவர் வான் கமாருல் வான் அஸ்ரான் உறுதிப்படுத்தினார். அந்த அந்த பெண்ணின் புகார் அறிக்கையை கொண்ட புகைப்படம் இன்று காலை முதல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.