Latestமலேசியா

அரசியலமைப்பு சட்டத்தின் மலாய் மொழியாக்க ஆவணத்தின் நோக்கம் என்ன ? – மனித உரிமை இயக்கம் கோரிக்கை

கோலாலம்பூர், ஜன 10 – கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தின் மலாய் மொழியாக்கத்தை அதிகாரப்பூர்வ ஆவணமாக்க, அரசாங்கத்திற்கு பரிந்துரைக்க சட்டத்துறை அலுவலகம் திட்டமிட்டிப்பதாக சட்டத்துறை தலைவர் Idrus Harun நேற்று கூறியிருந்தார். இதற்கான உண்மையான நோக்கம் என்னவென்று GHRF எனப்படும் Global Human Rights Federation என்ற உலகளாவிய மனித உரிமைகள் சம்மேளனம் கேள்வி எழுபியுள்ளது. குழந்தைகள் அல்லது வயது குறைந்தவர்கள் மதமாற்றம் தொடர்பான விவகாரத்தில் அது தொடர்பான அரசியலமைப்பு சட்டப் பிரிவில் தாய், தந்தை அல்லது பராமரிப்பாளரின் அனுமதி தேவையென வலியுறுத்துகிறது.

அரசியலமைப்பு சட்டத்தின் ஆங்கில வார்த்தையில் ” The Parent or gurdian ” தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பெற்றோர் என்றால் தாய் மற்றும் தந்தை இருவர் எனபது அர்த்தம் என 2018 ஆம் ஆண்டில் கூட்டரசு நீதிமன்றம் நிலைநிறுத்தியது. மலாய் மொழியாக்கம் செய்யப்பட்ட அரசியலமைப்பு சட்டம் அதிகாரப்பூர்வ ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன் அதன் விளக்கம் சரியாக இருப்பதை சட்டத்துறை தலைவர் Idrus Harun உறுதிப்படுத்த வேண்டும் என உலகளாவிய மனித உரிமைகள் சம்மேளனத்தின் தலைவர் S.Sashikumar கேட்டுக்கொண்டார். இதனிடையே ஒருதலைப்பட்சமான மதமாற்றம் தொடர்பான விவகாரத்தில் மலாய் மொழி பெயர்க்கப்பட்ட ஆவணத்தை பயன்படுத்துவது பாதிப்பையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியிருந்ததை பௌத்த, கிறிஸ்துவ ,இந்து , சீக்கிய மற்றும் Taoism மீதான மலேசிய ஆலோசனை மன்றம் சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!